டேப் செய்யப்பட்ட பேபி டயப்பர்கள் vs பேபி டயபர் பேன்ட் – உங்கள் குழந்தைக்கு நீங்கள் எதை தேர்வு செய்ய வேண்டும்?

டேப் செய்யப்பட்ட பேபி டயப்பர்கள் vs பேபி டயபர் பேன்ட் – உங்கள் குழந்தைக்கு நீங்கள் எதை தேர்வு செய்ய வேண்டும்?

November 20, 2023

டேப் டயப்பர்களா? அல்லது பேண்ட் வகை டயப்பர்களா? புதிய பெற்றோர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு சிறிய குழந்தையை வளர்க்கும்போது போது எதிர்கொள்ளும் பல சங்கடங்களில் முதன்மையானது, டயப்பர் மாற்றுவதுதான். நீங்கள் உங்கள் எதிர்கால கால்பந்து சாம்பியனுடன் பழகும்போது எப்படி டயப்பர்களை டேப் செய்வது? “அவள் ஒரு நிமிடம் கூட நிற்க மாட்டாள், உதைப்பதை நிறுத்த மாட்டாள்! உதவிக்கு என் கணவரையும் அழைத்து வர வேண்டும்! நான் தனியாக இருக்கும்போது விரக்தி அடைகிறேன்’’ என்கிறார் ஷாலினி. சரி ஷாலினி, டேப் ஸ்டைல் டயப்பர்களுக்கு உங்கள் குழந்தை பொறுமையிழந்து இருக்கலாம், பேண்ட் ஸ்டைல் டயப்பர்களை முயற்சி செய்து பாருங்கள். 

எது சிறந்தது? டேப் டயப்பர்களா அல்லது பேண்ட் டயப்பர்களா? (Which diapers are better taped or pants?)

இந்த இரண்டு வகை டயப்பர்களும் அதற்கேற்ற நன்மைகளையும் குறைபாடுகளையும் கொண்டுள்ளன. பிறந்த குழந்தைகளுக்கு அணிவிக்கக்கூடிய டேப் ஸ்டைல் டயப்பர்கள் அதிகப்படியான சிறுநீரை தாக்குபிடிப்பதில்லை. அதுமட்டுமில்லாமல் டேப் வகை டயப்பர்கள் பெரும்பாலும் பிறந்த குழந்தைகளுக்கு மட்டும்தான் அணிவிக்கும்படி இருக்கும் என்பது பெற்றோர்களின் புலம்பல்களாக உள்ளன. டயப்பர்களின் உறிஞ்சும் தன்மையை எடுத்துக்கொள்ளும்போது, இந்த இரண்டு வகை டயப்பர்களுக்கும் இடையில் அதிகப்படியான வித்தியாசம் ஒன்றும் இல்லை தான். எனவே நல்ல டயப்பர் பிராண்டுகளை தேர்வு செய்வதுதான் உங்களுக்கான சிறந்த வழியாக இருக்கும். சிறந்த பிராண்டு டயப்பர்கள் நல்ல உறிஞ்சுத்தன்மை கொண்டதாக இருக்கும். 

பேபி டயப்பர்களுக்கும் பேபி பேண்ட்ஸுக்கும் என்ன வித்தியாசம்? (What is the difference between baby diapers and baby pants?)

பெரும்பாலான பெற்றோர்கள் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு டேப் ஸ்டைல் டயப்பர்களை பயன்படுத்துவதையே விரும்புகின்றனர். அதேசமயம், பேண்ட் ஸ்டைல் டயப்பர்கள், உருண்டும் தவழ்ந்தும் செல்லத் தொடங்கிய குழந்தைகளுக்கும் உடல் ரீதியாக மிகவும் சுறுசுறுப்பாக இருக்கக்கூடிய குழந்தைகளுக்கும் அணிவிக்கப்படுகின்றன. அவர்களின் இந்த விருப்பத்திற்கான சில காரணங்களை இங்கு பார்க்கலாம்.  

  • புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு டேப் ஸ்டைல் டயப்பர்களைப் போல்பான்ட் ஸ்டைல் டயப்பர்களை சரி செய்ய வேண்டிய அவசியமில்லை.
  • பேண்ட் ஸ்டைல் டயப்பர்கள் குழந்தைகளை சுதந்திரமாக நடமாட அனுமதிக்கின்றன. டேப் டயப்பர்கள் பெரும்பாலும் உங்கள் குழந்தையின் தீவிரமான அசைவுகளைத் தக்கவைத்துக்கொள்வதால்பக்கவாட்டிலிருந்து கழிவுகள் வெளியேற முடியாது.
  • டேப் ஸ்டைல் டயப்பர்கள் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்குப் போடுவது எளிதாக இருக்கும் தான். பேண்ட் ஸ்டைல் டயப்பர்கள் அணிவிப்பதற்கு எளிதாகவும் விரைவாக இழுக்கக்கூடியதாகவும் இருக்கும். மேலும் இவை பெரிய குழந்தைகளுக்கு மிகவும் பொருத்தமானவையாக இருக்கும். 
  • பான்ட் ஸ்டைல் டயப்பர்களை அகற்றுவது எளிதானது, ஏனெனில் நீங்கள் அவற்றை பக்கவாட்டில் இருந்து கிழித்து அகற்ற முடியும். 
  • பெற்றோர்கள் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு டேப் ஸ்டைல் டயப்பர்களை விரும்புகிறார்கள், ஏனெனில் டயப்பர்களால் குழந்தைகளின் தொப்புள் பகுதி எந்த பாதிப்புமின்றி பாதுகாக்க அவற்றை சரிசெய்துக்கொள்ள முடியும்.

இருந்தாலும், சந்தையில் சில டயப்பர்கள் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான தொப்புள் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளவையாக உள்ளன. தொப்புள் பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் பேபி டயப்பர் பிராண்ட் எதுவென்றால் அது ஸ்னகி பேபி டயப்பர்கள் (Snuggy Baby Diapers) என்ற பிராண்ட் தான். இந்த தொப்புள் பாதுகாப்பு கொண்ட ஸ்னகி டயப்பர்கள் (Snuggy Diapers) உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் தொப்புள் பகுதியை காற்றோட்டமாக வைத்திருக்க அனுமதிக்கிறது, மேலும் தொப்புள் பகுதி விரைவில் குணமடையவும் இது உதவுகிறது.

சிறந்த உறிஞ்சக்கூடிய டயப்பர்கள் எவை? (Which are the best absorbent diapers?)

புதிதாகப் பிறந்த குழந்தை ஒவ்வொரு உணவிற்கும் இடையே சுமார் 58 மில்லி வரை சிறுநீர் கழிக்கிறது. 60 மில்லிக்கு மேல் சிறுநீர் கழிக்கக்கூடிய டயப்பர் போதுமான அளவு உறிஞ்சும் தன்மையை கொண்டுள்ளன. அதிகம் உறிஞ்சக்கூடிய இரவு டயப்பர்கள் 3-லிருந்து 7 முறை வரைக்கும் சிறுநீர் கழிப்பதை தாங்கக்கூடியதாக இருக்கும். இந்த முக்கியமான விஷயங்களை மனதில் வைத்து உங்கள் குழந்தைக்கான டயப்பர் ஸ்டைலை தேர்வு செய்யுங்கள். நீங்கள் இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையில் இருந்தால், இரண்டு வகை டயப்பர்களையும் மாறி மாறிப் பயன்படுத்த நாங்கள் பரிந்துரைக்கிறோம். இரண்டில் ஏதோ ஒரு வகை டயப்பர் பற்றி உங்களுக்கு உறுதியாக தெரியவில்லையென்றால் அதை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் குழந்தைக்கு இனி டயப்பர்களே தேவைப்படாது என்ற நிலை வருவதற்கு சில வருடங்கள் ஆகும்! எனவே, இந்த இரண்டு வகைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்துவது உங்களுக்கு வசதியாக இருந்தால் அதையே கடைப்பிடியுங்கள்.  

Snuggy Diaper - Vertical Dots Snuggy Diaper- Brown Planet Snuggy Diaper- Red Rocket Snuggy Diaper- Blue Rocket